உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இலங்கை அகதிகள்

sri-lanka-war-refugeesஇந்தோனேசிய அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சிலர் இந்தோனேசிய அரசு தமக்கான உரிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும் என்பதை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இந்தோனேசிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த முகாமில் 89 இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் ஆறு பேரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து வெளியேறியவர்களுக்கு பல்வேறு நாடுகளில் குடியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தமக்கும் சரியான தீர்வு ஒன்றை வழங்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இலங்கை அகதிகள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் அவர்களது உடல் நிலைமை மிக மோசமாக பதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

-uthayan

Tags: ,