11 மீனவர்களின் சடலங்கள் பலப்பிட்டியவில் கரையொதிங்கின! தேடுதல் தொடர்கிறது

fishing8பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 11பேரின் சடலங்கள் இன்று காலை குறித்த பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ளன.

கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில், 31 மீனவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று அறிவித்தது.

அத்துடன், மேலும் 29 மீனவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் 31 பேரை தொடர்ந்தும் தேடி வருவதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறு உயிரிழந்த மீனவர்களில் பெரும்பாலானவர்கள் பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, அப்பிரதேசத்தைச் சேர்ந்த 16பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையிலேயே இன்று காலை மேலும் 11பேரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

இதேவேளை, மேலும் சில மீனவர்களின் சடலங்கள் கடலில் மிதந்துகொண்டிருப்பதாகவும் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பலபிட்டிய பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,