விஜயுடன் ஜோடி சேரும் சமந்தா

samantha-vijay
ஆந்திர சினிமாவில் நம்பர் ஒன் நாற்காலியில் அமர்ந்திருப்பவர் சமந்தா. அமலா பால், அஞ்சலி, தமன்னா என, சில அதிர்வேட்டு நடிகைகள் அதிரடியாக பிரவேசித்த போதும், யாராலும் சமந்தாவை அட்டாக் செய்ய முடியவில்லை.
அடுத்து, தமிழிலும் முன்னணி ஹீரோக்களுடன் கமிட்டாகி வருகிறார் சமந்தா. லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்கும் அவர், இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அடுத்து, விஜய் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இதனால், சமந்தாவின் மார்க்கெட்டில் மேலும், பரபரப்பு கூடியுள்ளது. அதோடு, தமிழில் மணிரத்னம், ஷங்கர் என, முன்னணி இயக்குனர்களின் படங்களில் கமிட்டாகி, தோல் அலர்ஜி காரணமாக வெளியேறிய சமந்தா, ” இப்போது கிடைத்திருக்கும், இந்த மெகா வாய்ப்புகளால், தமிழில் விட்ட இடத்தை பிடித்து விட்‌டேன் என்று, உற்சாக முழக்கமிட்டு வருகிறார்.

Tags: , ,