கவர்ச்சியான ஆடைகளை அணிந்து பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என சீனப் பெண்களுக்கு அந்நாட்டு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது கோடைக்காலம் என்பதால், மிகக் குறைந்த ஆடைகளை அணிந்து கொண்டு பெண்கள் வெளியே வருவதால், பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்திருப்பதாகவும், அதனைக் குறைக்கவே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பஸ் மற்றும் சுரங்கப் பாதைகளில் பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பதாக பல முறைப்பாடுகள் வந்து கொண்டிருப்பதாகவும், பஸ் மற்றும் பொது இடங்களில் கவர்ச்சியான உடை அணிந்து வரவேண்டாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.