மேலும் 25 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

fishing2
மேலும் இந்திய மீனவர்கள் 25 பேர் நெடுந்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ். மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்கள் இழுவைப் படகில் இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் நேற்று புதன்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த போது, நெடுந்தீவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 25 மீனவர்களையும் நெடுந்தீவு கடற்படையினர் இன்று காலை யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேவேளை, கைதுசெய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக தகவல் இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் அலுவலகத்திற்கு யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

தவகலின் பிரகாரம் இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரி இராமேஸ்வரம் பகுதி மீனவர்களை பார்வையிட்டதுடன், மீனவர்கள் தொடர்பான விபரங்களையும் திரட்டினர்.

இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர்கள் மற்றும் யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினர் கைதுசெய்யப்பட்ட 25 மீனவர்களிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் இன்று ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் கூறினர்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,