
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்யும்போது தப்பி ஓடிய ஐந்து மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஐந்து படகிலிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் நேற்று மாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பிறிதொரு படகில் இருந்த ஐவர் கடற்படையினரிடமிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதன்போது கடலில் வீசிய பலத்த காற்று காரணமாக படகு கவிழ்ந்துள்ளது.
பயகில் சென்ற 4 மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்துள்ள அதேவேளை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இராமேசுவரத்தை சேர்ந்த 55 வயதான முனியசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-





