காணாமல் போன 3 பெண்களை மீட்க உதவிய நபருக்கு வாழ்நாள் இலவச ‘பேர்கர்’ பரிசு வழங்கிய மெக்டொனால்ட்

charles
அமெரிக்காவில் 10 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன 3 பெண்களை மீட்க உதவிய நபருக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேர்கர் சாப்பிடக்கூடிய வகையில் பரிசினை அளித்து மெக்டொனால்ட் நிறுவனம் அவரை கௌரவித்துள்ளது.

10 வருடங்களுக்கு முன்னர் தனித்தனியாக காணாமல் போன 3 பெண்கள் அண்மையில் அமெரிக்காவின் கிளீவ்லாந்தின் தென்பகுதியில் அமைந்திருந்த ஒரே வீட்டுக்காவலிலிருந்து மீட்கப்பட்டனர்.

இவர்களை மீட்க சார்லஸ் ரம்ஸே என்ற நபரே பொலிஸாருக்கு உதவினார். இவர் 911 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைத்து பெண்கள் தொடர்பான தகவலை வழங்கியதன் பின்னரே பொலிஸாரால் அவர்களை மீட்க முடிந்ததது.

இதனால் சார்ரலஸின் இந்த செயலை கௌரவப்படுத்தும் முகமாக மெக்டொனாலட் உணவகம் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேர்கர் சாப்பிட சிறப்பு அட்டை ஒன்றை சார்லஸுக்கு வழங்கியுள்ளது.

இது குறித்து மெக்டொனால்ட் பேச்சாளர் கூறுகையில், சார்லஸ் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அதனை இடையில நிறுத்திவிட்டு அப்பெண்களை மீட்க உதவினார். எனவே, அவர் வாழ்நாள் முழுவதும் திருப்தியாக பேர்கர் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே இந்த பரிசினை வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: ,