
ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கில் பெற்றோரிடம் தெரிவிக்காமல் கொழும்பு நோக்கிப் பயணம் செய்த 2 பாடசாலை மாணவிகள் குருநாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,
பேராதெனிய கண்ணொருவ பகுதியைச் சேர்ந்த பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவிகள் மூன்று பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பார்க்கும் ஆவலுடன் புறப்பட்டுள்ளனர்.
இவர்கள் இது தொடர்பில் பெற்றோருக்கு அறிவிக்காததுடன் பள்ளி முடிந்ததுடன் சீருடையுடனேயே கொழும்பு நோக்கி தமது பயணத்தை தொடங்கியுள்ளனர்.
இவர்களில் 2 பேர் குருணாகலை வரை இதற்காக வந்துள்ளதுடன் ஒரு மாணவிபயணத்தின் இடைநடுவிலேயே வீட்டுக்குத் திரும்புவதாக கூறி மீண்டும் கண்டிநோக்கி பயணமாகியுள்ளார்.
இந்நிலையில் பிள்ளைகளைக் காணாத பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை குருநாகல் பஸ் நிலையத்தில் வைத்து குறித்த மாணவிகள் 2 பேரையும் இரவு 10 மணியளவில் கைது செய்துள்ளனர்.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ஜனாதிபதியை சந்திக்கும் பொருடே தாம் கொழும்பு நோக்கி பயணமானதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடமிருந்து பிரிந்து மீண்டும் கண்டிக்கு பயணமான மாணவி 22 ஆம் திகதி கண்டியில் வைத்து செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





