வடக்கு காணி விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு

un-flag
வடக்கு காணி விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு காணிப் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான இணைப்புச் செயலக இலங்கைப் பிரதிநிதி அசென்கேயா ஓயூ, யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகளுக்காக காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருவதாக யாழ் கட்டளைத் தளபதி விளக்கமளித்துள்ளார். பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு வலிகாமம் காணிகள் சுவீகரிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சில தரப்பினரும் ஊடகங்களும் காணி சுவீகரிப்பு தொடர்பில் பிழையான தகவல்களை பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தின் பிரசன்னம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வடக்கு காணி சுவீகரிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக கேள்வி எழுப்பியதா என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.

Tags: ,