யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு எதிரான துரோகமாக கருதப்பட வேண்டும் – ஜனாதிபதி

mahinda-rajapaksa
யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு எதிரான துரோகமாகவே கருதப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த ரீதியாக தோற்கடிக்க முடியாது எனக் கருதிய அரசியல் தலைவர்கள், புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெறுவதனையும், படுகொலைச் சம்பவங்கள் இடம்பெறுவதனையும் இந்தத் தலைவர்களினால் நிறுத்த முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ளதாகவும், இவ்வாறான ஓர் நிலையிலும் சில தரப்பினர் குழப்பங்களை விளைவிக்க முயற்சி எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்துவதனை முதனிலையாகக் கொண்டு இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கு இடமளிக்கப்பட மாட்டாத எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை கட்படுத்த பல புறச் சக்திகள் பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்து வந்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மனித உரிமை மற்றும் ஜனநாயகம் என்ற போர்வையில் நாட்டின் விவகாரங்களில் தலையீடு செய்து, நாட்டை பிளவுபடுத்த முயற்சி எடுக்க்பபட்டு வருவதாகவும், இதற்கு அனுமதியளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Tags: ,