காட்டுப் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகள் மட்டுமே தற்போது அகற்றப்படாதுள்ள தாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
முன்னாள் போர் வலயங்களில் உள்ள, தற்போது மீள் குடியேற்றம் மற்றும் விவசாயத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய நிலங்களில் புதைக்கப்பட்டிருந்த அனைத்துக் கண்ணிவெடிகளையும் அகற்றியுள்ளதாகப் படையினர் அறிவித்துள்ளனர்.
காலாட் படை எதிர்ப்பு நிலக்கண்ணிகள், கவச வாகன எதிர்ப்பு நிலக் கண்ணிகள் மற்றும் ஏனைய புதைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் உள்ளடங்கலாகக் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வரையான நிலக் கண்ணிவெடிகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாகப் படையினர் தெரிவித்தனர்.
”மக்களின் மீள்குடியேற்றத்துக்குப் பயன்படுத்தப்படும் பிரதேசங்கள் மற்றும் அவர்களின் விவசாய நடவடிக்கைகள் போன்ற ஏனைய வாழ்வாதாரத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் நிலங்களில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை நாம் எம்மால் முடிந்தளவு அகற்றியுள்ளோம். நிலக்கண்ணிவெடிகள் புதைக் கப்பட்டிருந்த 2064 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் 95 சதவீதத்துக்கும் அதிகமான பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் அவை பாதுகாப்பான பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளன” என இராணுவப் பேச்சாளர்ருவான் வணிகசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுப் பகுதிகளில் புதைக் கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகள் மட்டுமே தற்போது அகற்றப்படாதுள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 2009 இல் புலிகளுடனான போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் இராணுவத்தினர் சில உள்ளுர் மற்றும் அனைத்துலகத் தொண்டர் நிறுவனங்களுடன் இணைந்து போர் வலயங்களில் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடிகளை அகற்றினர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.