இப்போதைக்கு நோ கல்யாணம் : சமந்தா!

samantha-hot
தமிழ், தெலுங்கு என இரு திரையுலைன் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வருபவர் சமந்தா. இவருக்கு சித்தார்த்திற்கும் காதல் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்ற செய்திகள் வெளியாகின.
இச்செய்தியினை உண்மையாக்கும் விதத்தில் சமந்தா தனது டிவிட்டர் இணையத்தில் ” இந்தாண்டு புதிய படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யும் நிலையில் இல்லை” என்று தெரிவித்தார். உடனே சித்தார்த், சமந்தா இருவரும் அடுத்தாண்டு திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்று செய்திகள் கொடிகட்டி விட்டன.

இச்செய்திக்கும் தனது டிவிட்டர் இணையத்திலேயே பதிலும் அளித்தார். ” தற்போது ஜுனியர் என்.டி.ஆருடன் ‘ ராமய்யா வஸ்தாவய்யா ‘ அட்டாரிந்திகி தரேடி ‘ படங்களிலும்,  நாகசைநதன்யாவுடன் ‘ ஆட்டோநகர் சூர்யா ” படத்திலும்,  ஜுனியர் என்.டி.ஆருடன் ‘ரபாஸா ” படத்திலும் நடிக்கிறேன். ஆகஸ்ட் மாதம் முதல் தமிழில் சூர்யா – லிங்குசாமி படம், விநாயக் சார் படம் ஆகிய படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறேன்.

ஆகையால் தான் புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளவில்லை. கல்யாண செய்திகள் இப்போதைக்கு இல்லை. கல்யாணச் செய்தியை நானே முறைப்படி கூறுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags: ,