செல்போன் மூலம் பெண்களுக்குப் பாதுகாப்பு!

cellphoneஇன்று தனியாகச் செல்லும் பெண்களின் பாத காப்பு குறித்த கவலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நம் கையில் உள்ள செல்போனே பாதுகாப்புக் கவசமாக செயல்படும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

செல்போனில் உள்ள Fight Back என்ற பயன்பாடு, பெண்கள் தங்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்போது அது குறித்துத் தமது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தியை அனுப்பும் வசதியை வழங்குகிறது. இந்தப் பயன்பாடானது, அந்த செல்போன் இருக்கும் இடத்தை GPS -ன் துணையுடன் அறிந்து, எச்சரிக்கைச் செய்தியோடு அந்த   இடத்தைப் பற்றிய விவரத்தையும் சுட்டிக் காட்டுகிறது.

மேலும் அந்தச் செய்தியும், குறிப்பிட்ட இடத்தைப் பற்றிய குறிப்பும் அருகில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்று சேருகிறது. இந்தப் பயன்பாடானது Android,Blacberry,Symbian ஆகிய இயக்க முறைமையில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பெண் ஒருவர் தன் கையில் உள்ள செல்போனின் ஒரே ஒரு பொத்தானை மட்டும் அழுத்தி, உரியவர்களுக்கு எச்சரிக்கைச் செய்தியை அனுப்பி பாதுகாப்பு பெற்றிடலாம்.

Tags: ,