வடக்கில் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் – குமரன் பத்மநாதன்

ntamil-KP
வடக்கில் இராணுத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில் துருப்பினரின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரின் பிரசன்னம் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது என்பதனை மறுப்பதற்கில்லை என்ற போதிலும், அது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1970களில் தமிழ் அரசியல்வாதிகள் தங்களை மூளைச் சலவை செய்ததாகவும் இதன் காரணமாக போராட்டத்தில் இணைந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தமிழகத்தில் சில அரசியல்வாதிகள் மாணவர்களைப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தியாவில் இலங்கை பௌத்த பிக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மனிதாபிமானமற்றவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு சாதகத்தை விடவும் அதிகளவு பாதகத்தையே ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயுத போராட்டங்கள் காரணமாக நாட்டின் கல்வித்துறை பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

-GTN

Tags: ,