முல்லைத்தீவு உடையார்கட்டுகுளம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஆறு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் பதுங்கு குழிகளை இராணுவ வீரர்கள் சுத்தம் செய்துக்கொண்டிருந்த போதே இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த ஐந்து இராணுவ வீரர்கள் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மற்றும் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.