இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் கட்சி முழுமையாக புரிந்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் விடயம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கூறப்படும் கருத்துக்கள் தவறானவை. அத்துடன் தமிழக மக்களின் குறிப்பாக இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மத்திய அமைச்சர் வாசனை நேற்று முன் தினம் சந்தித்த ராகுல் காந்தி இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், அது தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள் குறித்தும் வாசனிடம் ராகுல் காந்தி கேட்டறிந்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து முழுமையான அறிக்கையை அளிக்குமாறு அவர், வாசனுக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.





