கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் கலந்து கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் மிக முக்கியமான ஓர் நிகழ்வு எனவும், இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் எனவும் அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.
அமர்வுகளை ஒழுங்கு செய்வதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தயார் என அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பாதுகாப்பு, ஜனநாயகம், நல்லிணக்கம் போன்றன தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுவதனையே அவுஸ்திரேலியா விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தாவிட்டால் அதற்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தொடர்பான கேள்வி;க்கு அவர் பதிலளிக்கவில்லை.
தற்போதிலிருந்து பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறும் வரையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்த அரசாங்கத்தின் முனைப்பு வெளிப்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் நிபுணர் குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.