டெல்லியில் ஓடும் காரில் இளம் பெண் கற்பழிப்பு

rape
டெல்லியில் அடுத்தடுத்து நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் ஓடும் காரில் 23 வயது பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி அருகே உள்ள குர்கானில் ஒரு ஷாப்பிங் மாலில் இருந்து அந்த பெண் தனது நண்பர்களான 2 நில விற்பனையாளர்களுடன் காரில் சென்றார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியான மகிபால்பூர்-பால்வால் ரோட்டில் காரை நிறுத்தி அந்த பெண்ணை அவர்கள் கற்பழித்ததாக தெரிகிறது.

இதுபற்றி அந்த பெண் குர்கான் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை கற்பழித்ததாக நிலவிற்பனையாளர் ஒருவரை கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் ஆஸ்பத்திரியில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது அந்த பெண் கற்பழிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது.

Tags: ,