
இலங்கையின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் நாம் எந்தக் கருத்துகளையும் கூறுவதில்லை. நாம் அந்த நாடுகளின் இறையாண்மையை மதிக்கிறோம்.
அதுபோலவே எமது உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டியதில்லை என்றே இலங்கையும் எதிர்பார்க்கிறது” .
ஆனால் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்ற போர்வையில்,இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-uthyan





