எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நர்டுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளரான யாஸ்மீன் சூகா கோரியுள்ளார்.
யாஸ்மீன் சூகா, இலங்கை தொடர்பான விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாருஸ்மான் தலைமையில் இந்த நிபுணர் குழு அறிக்கை தயாரித்திருந்தது.
இலங்கையில் தொடர்ந்தும் சொந்த மக்களுக்கு எதிராக உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.மக்கள் தொடர்ந்தும் காணாமல் போவதாகவும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாவிட்டால் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்குமாறு கனடா விடுத்துள்ள கோரிக்கை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் அமர்வுகளில் கலந்து கொள்ள எடுத்தத் தீர்மானம் அதிர்ச்சி அளிப்பதாக சூகா குறிப்பிட்டுள்ளார்.
-GTN