கணவர் உங்கள் கைக்குள் இருக்க…

man-women
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சென்றால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்து நிற்கும். அதைவிடுத்து பெண்கள் எப்பொழுதும் கணவரிடம் சண்டை போட்டுக் கொண்டும், சந்தோகப்பட்டுக்கொண்டும் இருந்தால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போய்விடும். கணவரை உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள சில வழிமுறைகள் உள்ளன.அவை என்னவென்று பார்க்கலாம்…

• வெளியில் சென்ற கணவர், தாமதமாக வீடு திரும்பினால் அவரிடம் கோபம் காட்டி எரிந்து விழாதீர்கள்.முதலில் அவரை அமர வைத்து அவர் நிதானமடைந்தவுடன் தாமதமானதற்கு காரணம் அறிந்து கொள்ளுங்கள்.

• கணவன் கோபமாகப் பேசும் போது, வாயைத் திறக்காமல் இருப்பது நல்லது.

• தூங்கப் போகும் போதோ ….சாப்பிடும் போதோ…. எந்தக் குறைகளையும் கூறுவதைத் தவிருங்கள்

• கணவர் கேட்பதற்கு மற்றும் கூறுபவைகளுக்கு அலட்சியமாக நடந்துகொள்வதோ பதில் கூறுவதோ நல்லதல்ல.

• புகுந்த வீட்டில் யாரைப் பற்றியும் குறை கூறாம்ல் இருப்பது அவசியம்

• விடுமுறை நாட்களில் தேவை இல்லாமல் வெளியில் சுற்றாமல் அவரை போதிய ஒய்வு எடுக்கச் சொல்ல வேண்டும்

• நீங்கள் அடிக்கடி அம்மா வீட்டுக்கு போகாமல் இருப்பது நல்லது

• வெளியில் செல்லும் போது கணக்காக பணம் எடுத்து செல்ல வைக்காதீர்கள்

• கணவர் வாங்கி வரும் பொருட்கள் எப்படி இருந்தாலும் அருமை என்று கூற வேண்டும். குறை ஏதும் இருந்தால் சங்கடப்படுத்தாமல் மெதுவாக எடுத்துச் சொல்லுங்கள்

• கணவரின் கை இருப்பை அறிந்து உங்கள் தேவைகளை முன்வையுங்கள்.

Tags: , ,