இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை கட்டமைபொன்றை ஆரம்பிக்கும் முதல் நடவடிக்கையாக அமெரிக்க அரசாங்கம் 2012 ஆம் ஆண்டுக்கான தனது மனித உரிமை அறிக்கையில் மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கையை குற்றவாளியாக்கியுள்ளது.
இந்த அறிக்கை நேற்று முன்தினம் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. இந்த மனித உரிமை அறிக்கையின் மூலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை தாண்டி இலங்கை எதிராக செயற்பட அமெரிக்க திட்டமிட்டுள்ளது.
விடுதலைப்புலிகளி செயற்பட்டாளர்கள் குறித்து விசாரணை நடத்துவது, வெளிநாட்டு தூதுவர்களுடன் தொடர்புகளை கொண்டுள்ளவர்களை கண்டுப்பிடிப்பது போன்றவற்றையும் அந்த அறிக்கையில் மனித உரிமை மீறல் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை அமெரிக்காவின் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கப்படும் என அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.