அண்மைக்காலமாக இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தின் மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் மார்ச் மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழச்சி காரணமாகவே இலங்கை சுற்றுலாசபை இந்தத் தகவல் வெளியீட்டை தாமதப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் 97411 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இது 13 வீத வளர்ச்சி எனக் குறிப்பிடப்படுகிறது.எனினும் பெப்பரவரி மார்ச் மாத தரவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பான தகவல்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் தகவல்கள் வெளிடப்படும் எனவும் சுற்றுலா சபை அறிவித்துள்ளது.
-GTN