
மனித உரிமைகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் அரசியல் கொள்கைகளுக்கு முரண்பட்ட மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவது ஆபத்தான நிலைமை ஏற்படுத்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளும் கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் தரப்பினருக்கு கிடைக்கப்பெறும் அடைக்கலம், மாற்று கருத்துக்களை வெளியிடுவோருக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நீதி நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களில் தங்கி வாழாது, மக்களை ஏமாற்றதாத ஆட்சியாளர்களின் தேவை வெகுவாக எழுந்துள்ளது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
-GTN





