மக்கள் தொகை: விழித்துக்கொண்ட ஜப்பான்!

babyஉலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான ஜப்பானில், தற்போது மக்கள் தொகை குறைந்து கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் மக்கள் தொகை குறித்து சுகாதார மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சகத்தின் தேசிய மக்கள் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 2060 ஆம் ஆண்டில் ஜப்பானின் மக்கள் தொகை, தற்போதைய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து 8 கோடியே 67 லட்சமாக ஆகி விடும்.

இதே நிலை நீடித்தால் எதிர்வரும் 2110 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 4 கோடியே 29 லட்சமாகி விடும். தற்பொழுது ஜப்பானின் மக்கள் தொகை 12 கோடியே 77 லட்சமாக உள்ளது.

உலகில் ஜப்பானில் தான் சராசரி மனித ஆயுள் அதிகம்.கடந்த 2010 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி அங்கு சராசரி மனித ஆயுள் 86.39 ஆண்டுகள்.

இது 2060 ஆம் ஆண்டில் பெண்களைப் பொறுத்தவரை 90.93 ஆண்டுகளாக அதிகரித்து விடும். ஆண்களின் சராசரி ஆயுள் தற்போதைய 79.64 ஆண்டுகளில் இருந்து 84.19 ஆண்டுகளாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,