பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கைது செய்யப்பட்டார். இஸ்லாமாத் தில் தங்கியிருந்த பண்ணை வீட்டிலேயே முஷரப் கைது செய்யப்பட்டார். நீதிபதிகளை காவலில் வைக்க உத்தரவிட்டதாக முஷரப் மீது குடறம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கில் ஜாமீனை நீட்டிக்கக் கோரிய மனுவை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2007 ஆம் ஆண்டு தமது ஆட்சியின்போது 60 நீதிபதிகளை முஷரப் பதவி நீக்கம் செய்தார். பதவி நீக்கத்தை எதிர்த்து நீதிபதி தொடர்ந்த வழக்கில் முஷாரப்பை கைது செய்ய உத்தரவிடப்பட்டது. கைதில் இருந்து தப்பிக்க கடந்த 4 ஆண்டுகளாக முஷரப் தஞ்சமடைந்திருந்தார். நாடாளு மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடுமுஷரப் நாடு திரும்பினார். வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க இடைக்கால ஜாமீன் பெற்றிருந்தார். முஷாரப்பின் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க இஸ்லாமாபாத் நீதிமன்றம் நேற்று மறுத்து விட்டது. ந்மேலும் வழக்கில் உடனடியாக முஷாரப்பை கைது செய்யவும் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவை அடுத்து தனது பண்ணை வீட்டில் தஞ்சமடைந்தார். சக்ஷாபாத் பண்ணை வீட்டில் இருந்த அவரை அதிகாலையில் போலீஸ் கைது செய்தது.