முஷாரப்புக்கு கைது உத்தரவு; நீதிமன்றத்திலிருந்து தப்பி ஓட்டம்!

Tamil-Daily-News-musarab
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் முன் ஜாமீனை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது உத்தரவை அடுத்து முஷாரப் அவரது காரில் தப்பி ஓடியுள்ளார்.

முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முஷாரப்புக்கு, நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இந்நிலையில், அண்மையில் நாடு திரும்பியிருந்த முஷாரப், இவ்வழக்கில் தமக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீனை மேலும் நீட்டிக்கக் கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், ஜாமீனை நீட்டிக்க மறுத்து அவரை கைது செய்ய ஆணையிட்டது.

இதனையடுத்து அவரை கைது செய்ய போலீஸார் தயாராவதற்குள், முஷாரப்பை அவரது பாதுகாவலர்கள் அவரது காரில் ஏற்றி தப்பிச் சென்றனர். பாகிஸ்தான் ஊடக தகவலின் படி முஷாரப் கைது உத்தரவை அடுத்து அவர் தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கின்றன.

நீதிமன்ர வாளகத்தில் அப்போது முஷாரப் ஆதரவாளர்கள் குவிந்திருந்தால் அங்கு பரபரப்பு சூழல் நிலவியது.

Tags: , , ,