அமெரிக்காவில் விடுமுறை நாள் விருந்து ஒன்றில் நண்பர்களால் கொடூரமாக சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இந்த பயங்கரத்தை இணையதளத்தில் வெளியிட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவள் அந்த 15 வயது சிறுமி. அவளது பெயர் ஆட்ரீ பாட். ஒரு விடுமுறை நாளில் இரவு விருந்துக்கு தனது நண்பரின் வீட்டுக்கு சென்றார். அந்த விருந்தில் ஆட்ரீக்கு ஏற்கனவே அறிமுகமான நண்பர்கள் 15 பேர் கலந்து கொண்டனர். அந்த விருந்திலே மது பரிமாறப்பட்டது.
போதையில் ஆட்ரீ, மாடியில் இருந்த ஒரு அறைக்குப் போய் தூங்கி விட்டார். மது விருந்து முடிந்ததும் அந்த மாடி அறைக்கு சென்ற நண்பர்களுக்கு, தூங்கிக்கொண்டிருந்த ஆட்ரியைப் ஒருவரைத் தொடர்ந்து ஒருவர் கற்பழித்துள்ளனர். அதை செல்போனில் படமும் பிடித்துக்கொண்டுள்ளனர்.
ஆட்ரீ கண் விழித்துப் பார்த்தபோது, தான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து பெரும் அதிர்ச்சியாக அவளை நண்பர்கள் கற்பழித்த காட்சியை இணையதளத்தில் வெளியிடப்பட்டது தெரிய வந்தது.
இதில் மனம் உடைந்து ஆட்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆட்ரீயின் பெற்றோருக்கு மகள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியாமல் இருந்தது.
அவர்களுக்கு ஆட்ரீயின் நண்பர்கள் மூலம் சமூக வலைத்தளத்தில், ‘‘என் வாழ்வில் ஒருபோதும் நடந்திராத மிக மோசமான சம்பவம் நடந்துவிட்டது. என் வாழக்கை நாசமாகி விட்டது’’ என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனை அடுத்து ஆட்ரீயின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இப்போது 3 சிறுவர்களை கைது செய்துள்ளனர்.
-webdunia