சென்னை: ‘என் பட பாடலுக்கு இசை அமைக்க தமிழ் அறிவு வேண்டும்Õ என்றார் இயக்குனர் ராஜகுமாரன்.
தேவயானி நடித்து தயாரிக்கும் படம் ‘திருமதி தமிழ். இதில் அவரது கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் ஹீரோவாக நடிப்பதுடன் படத்தை இயக்குகிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை.
இப்படம்பற்றி ராஜகுமாரன் கூறியது:
திருமதி தமிழ் என்று பட தலைப்பு வைத்தபோது, ‘இப்படியா தலைப்பு வைப்பது?Õ என்று எஸ்.ஏ.ராஜ் குமார் கேட்டார். ‘கன்னித்தமிழ், பைந்தமிழ், செந்தமிழ் என்றுதான் சொல்வார்கள். தமிழ் எப்போது திருமதி ஆனது? என்றார். செந்தமிழ் என்று அங்கீகாரம் கிடைத்தவுடனே இந்த தலைப்பை நான் வைத்தேன். இப்படத்தில் குத்துபாடலோ, ரெட்டை அர்த்த பாடல்களோ கிடை யாது. தமிழ் இலக்கிய, இலக்கணத்தை மையப்படுத்தியே எல்லா பாடலும் அமைக்கப்பட்டுள்ளது. புது கவிஞர் பாடல் எழுதி உள்ளார். இதைபுரிந்துகொண்டு இசை அமைக்க தமிழ் அறிவு உள்ள இசை அமைப்பாளர் தேவை. அப்படியொரு இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்தான். தமிழில் நிறைய ஆராய்ச்சி செய்து தேர்ந்தவர். தமிழ் அறிவு இல்லாதவர்கள் இப்பட பாடலுக்கு இசை அமைக்க முடியாது. அதனால்தான் ராஜ்குமாரை தேர்வு செய்தேன். ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் என்றார்.





