மனைவியின் பிரசவத்தை காணொளி எடுக்க விரும்பும் இளவரசர்!

2012 London Paralympics - Day 1 - Cycling - Trackபிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது மனைவி பிரசவம் நடக்கும்போது அதனை காணொளி எடுக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறப் படுகிறது.

கடந்த வருடம் பிரிட்டன் இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் திருமணம் நடைபெற்றது. கேட் மிடில்டன் தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில், தனது மனைவிக்கு பிரசவம் நடக்கும் சம்பவத்தை காணொளி எடுக்க இளவரசர் வில்லியம் திட்டமிட்டுள்ளார்.ஆனால் இளவரசரின் இந்த வினோத ஆசைக்கு இளவரசி மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிரசவ காணொளி, சமூக விரோதிகளின் கையில் கிடைத்து அந்த காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி விடக்கூடாது என்று கேட் மிடில்டன் அச்சப்படுவதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

-inneram

Tags: ,