தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கலாம் என அமெரிக்கா கருதியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
1989ம் ஆண்டில் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அச்சுறுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆயுத வன்முறைகளை வெடிக்கச் செய்வோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.
போதியளவு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் வன்முறைகளில் ஈடுபடுவோம் என தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரித்திருக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான உதவிகளை கருணாநிதி அதிகளவில் வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக தமிழீழம் தொடர்பான கடும்போக்குவாதத்தை கருணாநிதி பின்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து கருணாநிதி ஏனைய ஆயுதக் குழுக்களை உதாசீனம் செய்து, புலிகளுக்கு கூடுதல் ஒத்துழைப்பு வழங்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-Globaltamilnews