தன்னம்பிக்கைக்கு 4 எளிய வழிகள்

tamil-nambikkaiஉங்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட இதோ எளிய வழிகள்…!

1 நீங்கள் உங்களை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நேசிக்க ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்குள் தன்னம்பிக்கை வேரூன்றும். விரைவாகவே அதன் பயனை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். எந்திரம்போல் எப்போதும் வேலை வேலை என்று அலையாமல் உடலுக்கும் உள்ளத்திற்கும் சற்று ஓய்வு கொடுத்து உங்களை நேசிக்கத்தொடங்கினால் மனதில் உற்சாகம் தோன்றி அமைதியும் தன்னம்பிக்கையும் ஏற்படும்.

2 உங்கள் மேனியழகு, உங்கள் உள்ளத்தில் தன்னம்பிக்கையை முழுமையாக மலரச் செய்யும். அதற்காக தினந்தோறும் உடற்பயிற்சி செய்யுங்கள். நிறைய தண்ணீர் பருகுங்கள். இனிப்பு பலகாரங்கள், கொழுப்புச்சத்துள்ள எண்ணெய் பலகாரங்களை தவிர்த்து புரோட்டீன் சத்து மிதமாக உள்ள உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இரவில் நன்றாக தூங்குங்கள்.

3 உங்கள் முகத்திற்கும் மேனிக்கும் பொருத்தமான அழகுசாதன பொருட்களை மிதமாக பயன்படுத்துங்கள். அழகு உங்களை மகிழ்ச்சி நிறைந்தவராக மாற்றும்.

4 உங்களிடம் உள்ள சின்னஞ்சிறு குறைகளை பிறர்சுட்டிக்காட்டும் முன்பு நீங்களே அறிந்து, அவைகளை அகற்றும் வழிகளை ஆராய்ந்து வெற்றிகாணுங்கள். உங்கள்தோல்விகளை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதீர்கள். இப்படிச் செய்தால் தடைக் கற்கள் வெற்றியின் படிக்கட்டுகளாக மாறுவதை உணர்வீர்கள்.

Tags: