கொழும்பில் 80 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்துக் கோயிலை அகற்றி வாகன தரிப்பிடம் அமைக்கும் கோத்தபாய

Gotabhaya-Rajapaksa
கொழும்பில் அலரி மாளிகைக்குப் பின்புறம் உள்ள 80 ஆண்டுகால பழமைவாய்ந்த இந்துக் கோவில் இன்று வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.
சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபையே இதற்கான உத்தரவை வழங்கியுள்ளது.

இந்தக் கோவில் அமைந்துள்ள இடத்தில் கொழும்பு மாநகரசபை வாகனத் தரிப்பிடம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

கொள்ளுப்பிட்டி தர்மாலோக மாவத்தையின் முடிவில், அலரி மாளிகைக்குப் பின்புறமாக சிறி பூமாரி அம்மன் கோவில் உள்ளது.

1920களில் இந்தப் பகுதியில், கொழும்பு மாநகரசபையினால் கொள்ளுப்பிட்டி தர்மகிட்யராமய விகாரைக்குப் பின்பாக, 1930களில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டது.

மூன்று தல விருட்சங்களைக் கொண்ட இந்தக் கோவில் கொள்ளுப்பிட்டிப் பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது.

இந்தநிலையிலேயே கொழும்பு மாநகரசபை இந்தக் கோவிலை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,