கிழக்கு மாகாண ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்திற்கும் இராணுவத்திற்கும் தொடர்பில்லை!- இராணுவ பேச்சாளர்

vanasuriya
கிழக்கு மாகாணத்தில் இந்து ஆலயங்களில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு கிடையாது என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இந்த சம்பவங்களுக்கு இராணுவத்தினரே பொறுப்பு என தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குருக்கல் மடம் செல்லக்கதிர்காமம், குருக்கல்மடம் அய்னார் கோயில், மாங்காடு பிள்ளையார் கோயில் ஆகியவற்றிலும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், இராணுவத்திற்கு தொடர்பு உள்ளது என்ற இந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்தவிதமான உண்மையும் கிடையாது. இவை அடிப்படையற்றவை.

எனினும் பிள்ளையார் கோயில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது விசாரணைகளின் மூலம் உண்மை வெளியிடப்படும். அப்போது விடுதலைப் புலிகளின் ஆதரவு இணைய ஊடகங்களின் போலிக் குற்றச்சாட்டுக்கள் முறியடிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,