இந்து ஆலயங்கள் மீது தொடரும் அடாவடி! விநாயகர் ஆலய கோபுரத்தின் 13 பாவைகள் இனந்தெரியாதோரால் உடைப்பு!

templeதிருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் உள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கோபுரத்தில் 13 பாவைகள் இனம்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாம் என்றும் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஆலய பரிபாலனசபையின் செயலாளர் எ.நடராசா தெரிவித்தார்.

இதேவேளை அண்மையில் மட்டக்களப்பில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: , ,