நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெறவிருந்து ஒரு கோடி ரூபா நலத்திட்டம் ரத்தானது ஏன்? பரபரப்பான தகவல்கள் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
>விஜய்க்குள் இருக்கும் அரசியல்வாதியின் முகத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதற்காக நலத்திட்டங்களை விஜய் மேற்கொண்டு வருகிறார் என கருத்துக்கள் பல வெளியாகின்றது. ஆனாலும் விஜய் அவற்றை கண்டுகொள்ளாது உதவி செய்வதற்கு அரசியலுக்கும் எந்த தொடர்புமில்லை. அது எனது திருப்திக்காக மட்டுமேங்ணா…. என்று கூறிவருகிறார்.
இந்நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி பிறந்த நாள் கொண்டாடவிருக்கும் விஜய், அதனை முன்னிட்டு நாளை ஒரு கோடி ரூபா நலத்திட்ட உதவிகளை சென்னை மீனம்பாக்க வினமா நிலையத்திற்கு அருகில் மேடை போட்டு தமிழகத்திலுள்ள ரசிகர்களை கூட்டி ஆரவாரமாக செய்யவிருந்தார்.
ஆனால் இறுதி நேரத்தில் இந் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. விழா திடீர் என்று ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் சாயம் பூசப்பட்ட காரணங்கள் உட்பட பல்வேறு காரணங்கள் வெளியானது.
இது குறித்து அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில், வரும் 8ம் திகதி விஜய் ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கவிருந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் எனத் தெரிவித்துள்ளா.
இந்த விழாவுக்காக மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் கூட நடந்து வந்தன. மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இந்த கல்லூரியில் விழா நடந்தால் விஜய் ரசிகர்கள் குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கருதிய பொலிஸார் விழாவுக்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.
முதலில் சிறிய அளவில் விழா நடத்த திட்டமிட்டனர். பின்னர் மாநிலம் முழுவதும் இருந்து ரசிகர்கள் வந்து கலந்து கொள்ளும் பிரமாண்ட விழாவாக நடத்த திட்டமிட்டதால் தான் இத்தனை குளறுபடியாம். தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் திரண்டு வருவதால் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாம்.
அதனால் பாதுகாப்பு காரணங்களை மனதில் வைத்து பொலிஸார் அனுமதி மறுத்துவிட்டார்களாம். மேலும் நாளை அதிமுக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனால் விஜய் விழாவுக்கு பாதுகாப்பு அளிப்பதில் குளறுபடி ஏற்படலாம் என்று கருதியும் போலீசார் அனுமதி மறுத்தனராம். மேலும் அரசியல் கட்சியின் தலையீட்டாலும் தான் இந்த விழா ரத்து செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
இதேவேளை அரசியல் ஆசைகளை அடகிய ஆண்ட விஜய், சுமார் 2 வருடங்களின் பின்னர் நானும் இருக்கிறேன் என ரசிகர்களை கூட்டி காட்ட வேடிக்கை காண்பிக்க எடுத்த முயற்சிகள் இப்படி வீணாப்போச்சே… என இணையத்தளங்களில் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் விஜய் எதிர்பாளர்கள்.