முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா உட்பட இராணுவ நீதிமன்றத்தால் 5,726 பேர் தண்டிக்கப்பட்டனர்- அமைச்சர் தினேஸ் குணவர்த்தன

dinesh
2006ஆம் ஆண்டு முதல் 421 படை அதிகாரிகளும் 5205 படை வீரர்களும் இராணுவ நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டார்கள் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அரசாங்க தரப்பு பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கண்ட தகவலை வழங்கினார்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் காலி கடற்படை முகாம் மீது புலிகள் தாக்கிய போது அப்படை முகாமிலிருந்த கொமடோர் டி.எம்.பி.மெண்டிஸும் இராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றார் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து மற்றுமொரு கேள்வியை எழுப்பிய ரவி கருணாநாயக்க எம்.பி, ‘முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, இராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டமை தொடர்பில் ஏன் விளக்கமளிக்கவில்லை’ என்றார்.

இதற்கு பதிலளித்த தினேஸ் எம்.பி, ‘அது பற்றி இன்னொரு கேள்வி உத்தியோகபூர்வமாக கேட்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: , ,