தமிழரசுக் கட்சி சுமந்திரனுக்கு நேரமில்லையாம்! சிவில் சமூகத்திற்கும் ஆப்படிக்கும் தமிழரசு கட்சி

K-Kuruparan
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு நேரம் இன்மை காரணமாக சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனான சந்திப்பில் கலந்து கொள்ளமுடியாது என்று கூட்டமைப்பு அறிவித்தனால் சந்திப்பு இடம்பெறாது என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சிவில் சமூகப் பிரதிநிதிகளின் இணைப்பாளரும் சட்டத்தரணியுமான குருபரன் குறித்த அறிவுறுத்தலை விடுத்திருந்தார்.

வவுனியா அமைதி அகத்தில் நாளைய தினம் அரசியல் தலைமைகளுடனான சந்திப்பிற்கான தீர்மானம் மன்னாரில் நடைபெற்ற சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தேசிய அவை அமைப்பது தொடர்பில் தமிழரசுக்கட்சியினர் ஒருமித்த குரலில் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அதேவேளை தமிழ் மக்களுக்கான இறுதித்தீர்வு தொடர்பிலான ஆலோசனை வரைபு ஒன்றை உருவாக்குவதற்கென மூவர் கொண்ட குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்குகொள்வதற்கு சுமந்திரனுக்கு நேரமில்லை என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் குருபரன் அறிவித்திருக்கின்றார்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: , ,