எப்படி வந்தன? நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் இருந்து வெடி குண்டுகள் மீட்பு!

lori
அம்பாறை – மஹாஓயா பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான லொறியை சோதனை செய்தபோது அதில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மஹாஓயா பொலிஸார் இன்று (07) அதிகாலை மேற்கொண்ட திடீர் சோதனையில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

35 மோட்டார் குண்டுகள், ஆர்.பி.ஜி குண்டு உள்ளிட்ட யுத்த உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வஐகின்றனர்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,