
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மகள் தற்கொலைக்கு முயன்றார். இதனால் இசை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாப் இசையின் மன்னராக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன், கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் உயிரிழந்தார். ஜாக்சனின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதுகுறித்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவரது மகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜாக்சனுக்கு கிரின்ஸ், பாரிஸ், ப்ளான்கெட் என 3 வாரிசுகள் உள்ளனர்.
இவர்களில் பாரிஸ் ஜாக்சன் (15) தற்கொலைக்கு முயன்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள கேலபாசஸ் இல்லத்தில் இருந்து பாரிஸ் அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி உடல்நலம் தேறி வருவதாக ஜாக்சனின் உறவினர்கள் தெரிவித்தனர். இந்த தகவல் டிவி.க்களில் ஒளிபரப்பானது. பாரிசின் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தன.
அதிக அளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் டுவிட்டர் பக்கத்தில், Ôஇச்சம்பவத்துக்கு முதல் நாள் கண்ணீர் ஏன் உப்பாக உள்ளது என்பது எனக்கு வியப்பாக உள்ளது? என்னுடைய எல்லா பிரச்னைகளும் என்னை விட்டு விலகி விடும் என்று நினைத்தேன். ஆனால் அது என்னுடனேயேதான் இருக்கும் போலிருக்கிறதுÕ என்று பாரிஸ் குறிப்பிட்டுள்ளார். பாரிசின் தற்கொலை முயற்சியால் மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.





