13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை தாம் நிராகரிப்பதாக புலம் பெயர் புலிகள் முதல் முறையாக நேற்று தெரிவித்துள்ளனர் என திவயின கூறியுள்ளது.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தினால் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது எனவும் சுயாட்சியே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்கும் எனவும் ஈழ தமிழர்களின் சர்வதேச பேரவை அறிவித்துள்ளது. அத்துடன் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண வடக்கு, கிழக்கில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் பேரவை தெரிவித்துள்ளது.
ஒற்றையாட்சி இலங்கைக்குள் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் போன்ற தீர்வுகள் அவசியமில்லை எனவும் பேரவை கூறியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.