சட்ட பீட மாணவி டெங்கு காய்ச்சலால் பலி

dead
டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட மாணவி உயிரிழந்துள்ளார்.

சட்ட பீடத்தைச்சேர்ந்த 21 வயதான மாணவியே டெங்கு காய்ச்சலினால் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் காணப்பட்டதையடுத்து நேற்று அந்த பீடம் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்களிடையே டெங்கு நோய் பரவி வருகின்ற நிலையில் அப்பீடமும் முகாமைத்துவம் மற்றும் வர்த்தக பீடங்களும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொழும்பு மாநகரசபையின் ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் இரந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: , , ,