அமீர்கானை சந்திக்க விரும்பும் பில்கேட்ஸ்

bill-gates
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் பொலிவுட் நடிகர் அமீர் கானை சந்தித்து பேச விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அமீர் கானின் பல்வேறுபட்ட சமூக சேவைகளில் ஈடுபடும் நடவடிக்கைகளால் அவரது புகழ நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இதனால் அமீh கானை சந்திக்க பல பிரபலங்களும் ஆர்மாக உள்ளனர்.

இந்நிலையில் சமூக சேவைகளில் அக்கறைகொண்ட மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸும் அமீர் கானை சந்திக்க விரும்புவதாக தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பில்கேட் அவருடைய வலைப்பூவில் எழுதியிருப்பதாவது, பொலிவுட் நடிகரும், சமூக ஆர்வலருமான அமீர் கானை சந்திக்க ஆவலாக உள்ளேன். யுனிசெப் தூதுவராக இருக்கும் அவரது பணிகள் குறித்து கேட்டறிய விரும்புகிறேன். அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதே குறித்து அறிய ஆவலாக இருக்கிறேன்.

நான் அதிர்ஷ்டசாலியாக இரந்தால் அவரை நடமாடச் சயெ;து மகிழ்வேன் எனத் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,