
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 119 பேருக்கு சமுர்த்தி நியமனங்களினை அரசாங்கம் வழங்கியுள்ளது.
சிறிலங்கா சுதந்திர கட்சியாலும் அரசுடன் சேர்ந்து இயங்கும் அரசியல் கட்சிகளாலும் சிபார்சு செய்யப்பட்ட 119 பேரினை சமுர்த்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கும் நியமன கடிதங்கள் நேற்றைய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய றிசாட் பதியுதீனால் இதற்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நுனைஸ்பாறூக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கனகரத்தினம், சுமதிபாலா மற்றும் சமுர்த்தி அதிகாரசபையின் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் இருந்து எமது செய்தியாளர் வாசு-





