
அவுஸ்திரேலியா கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ‘ஹமஸ்ட் டூவும்பா’ எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நல்லெண்ண நோக்கத்தின் அடிப்படையிலேயே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
118 மீற்றர் நீளமும் 3600 டொன் நிறையும் கொண்ட குறித்த கப்பலில் 192 கடற்படையினர் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வந்துள்ள கப்பல் எதிர்வரும் நான்காம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் தரித்துநிற்கும் என்றும் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-





