சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் உண்ணாவிரத போராட்டம் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்

tear-gas-attack
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்திருந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற இடத்தின் மீது காவற்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தி மாணவர்களை கலைத்துள்ளனர்.

அத்துடன் 05 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின் போது காவற்துறையினரும், சில மாணவர்களும் காயமடைந்துள்ளனர். பதுளை – கொழும்பு வீதியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை கலைத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்த நான்கு மாணவர்கள் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -GTN

Tags: ,