2012 வரை தொழிற்பட்ட புலிகளின் வலையமைப்பு -அமெரிக்கா

LTTE-Flag
தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதி வலையமைப்பு 2012 ஆம் ஆண்டு முழுவதும் தொழிற்பட்டது எனவும், அகதிகள் முகாம்களிலிருந்து ஆட்களை கடத்தியதில் புலிகள் கூடுதலாக பங்குப்பற்றினர் என அமெரிக்கா கூறியுள்ளது.

பல்வேறு அறிக்கைகளில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளன எனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அதன் சர்வதேச தொடர்பாளர்களையும் தமிழ் புலம்பெயர்ந்தோரையும் பயன்படுத்தி ஆயுதங்கள், தொடர்பு சாதனங்கள், நிதிகள் மற்றும் வேறு தேவைகளுக்கான பொருட்கள் என்பவற்றை பெற்றது என அமெரிக்க இராஜங்க திணைக்களம் வெளியிட்ட பயங்கரவாதம் 2012 எனும் அறிக்கையில் கூறியுள்ளது.

இலங்கையுடனான பயங்கரவாத எதிர் கூட்டுறவும் பயிற்சியும் 2012 இல் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்றும் அமெரிக்க இராஜங்க திணைக்களம் கூறியுள்ளது.

இலங்கை அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய பழைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நியதிச்சட்ட மற்றும் கொள்கைகள் இதனை கட்டுப்படுத்தின. என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி சேர்ப்பதை தடுப்பதிலும் கறுப்புபண சலவைக்கு எதிரான நடவடிக்கையிலும் இலங்கை திருப்திகரமாக செயற்படாமையால் அமெரிக்க நிதி நடவடிக்கைகளுக்கான விசேட செயற்படை இலங்கையை கறுப்புப்பட்டியலில் சேர்த்திருந்தது.

இலங்கை, இப்போது இந்த விசேட செயலணிப்படையின் வேலைத்திட்டதை பெரும்பாலும் பூரணப்படுத்தியுள்ளதால் அது 2013 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் கறுப்பு பட்டடியலிலிருந்து இலங்கையை நீக்கப்படக்கூடுமென அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கையின் நிலைமை நேரில் வந்து பரிசீலிக்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,