கச்சதீவுக்கு அருகே இலங்கைப் போர்க் கப்பல்கள்; அச்சத்தில் மீனவர்கள்

kachcha
இலங்கைப் போர்க்கப்பல்கள் கச்சதீவு அருகே நிறுத்தப்பட்டுள்ளதாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று திரும்பிய தமிழக மீனவர்கள் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 45 நாட்களாக இருந்த மீன்பிடித் தடைக்காலம் நேற்று மே 29ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இராமேஸ்வரத்தைத் தவிர்த்த மற்ற பகுதி மீனவர்கள் இன்றே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

ஆனால் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வரும் சனிக்கிழமைதான் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இந்த நிலையில், இன்று மீன்பிடிக்க நாட்டுப் படகில் கடலுக்குச் சென்ற தங்கச்சி மடம் மீனவர்கள் சிலர் கரை திரும்பிய பின்னர் தெரிவிக்கையில்,

இலங்கை இராணுவம் கச்சதீவு அருகே 4 போர்க் கப்பகளை நிறுத்தியுள்ளது. மேலும், 5 சிறிய ரோந்துக் கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. கச்சதீவு பகுதியைச் சுற்றி மிதவை பலூன்கள் அதிகம் வைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக விசைப்படகு மீனவர்கள் இரட்டை மடி வலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவர் என்பதால் அதிகம் கண்காணிப்பார்கள், அவர்களை இலங்கை இராணுவத்தினர் அடித்து விரட்டுவார்கள். ஆனால், நாட்டுப் படகு மீன்வர்களை பெரிதும் தடை செய்வதில்லை. ஆனால், இந்த முறை நாட்டுப் படகு மீனவர்களையும் இனிமேல் இங்கே மீன் பிடிக்க வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்கள் என்றனர்.

இந்தத் தகவல் இராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags: ,