சீனாவில் ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடத்தில் கழிவு நீர் குழாயில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.அந்த கட்டிடத்தின் உரிமையாளர் உடனடியாக போலிசிக்கு தகவல் தந்தார்.
விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் சத்தம் வந்த அந்த கழிவு நீர் குழாயை அறுத்து எடுத்தனர்.குழந்தை நன்றாக உள்ளே சிக்கி இருப்பதை பார்த்த தீ அணைப்பு வீரர்கள் உடனடியாக குழாயுடன் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
மருத்துவர்கள் அந்த குழாயை அறுத்து குழந்தையை உயிருடன் மீட்டு இன்குபேட்டரில் வைத்து காப்பாற்றினர்.
இந்த குழந்தையை வீசிய தாய் அந்த கழிவு நீர் தொட்டியை விட மோசமானவள் என்று சீன பத்திரிக்கைகள் விமர்சித்துள்ளன.