அமெரிக்காவில் இதய மற்றும் நாடி துடிப்பு நின்ற நிலையில் ஒரு குழந்தைக்கு தாயான ஒரு பெண், குழந்தை பிறந்த பின், உயிருடன் திரும்பிய அதிசயம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் மிசவுரி நகரில் வசித்து வருபவர் எரிக்கா நிக்ரெல்லி (32), அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் நாத்தனும் அதே பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
9 மாத கர்ப்பிணியாக இருந்த எரிக்கா, கடந்த பிப்ரவரி மாதம் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, தன்னிலை இழந்து மயங்கி விழுந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் அப்பெண்ணின் நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் முற்றிலுமாக அடங்கிப்போய் விட்டது.
அவர் இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த குழந்தையை மட்டும் அவசர அவசரமாக ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர்.அதிர்ஷ்டவசமாக குழந்தையின் நாடி மற்றும் இதயத்துடிப்பு நன்றாகவே இருந்தது.